பாடசாலை வளாகத்தினுள் நுழைந்த யானையால் பரபரப்பு!

வவுனியா வடக்கு மருதொடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் இன்று(16) காலை காட்டு யானையொன்று புகுந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கிராம மக்கள் ஒன்றினைந்து குறித்த காட்டுயானையைக் காட்டுக்குள் விரட்டியதாக கூற்ரப்படுகின்றது. எனினும் அந்த யானையானது அக் கிராமத்தினை அண்டிய பகுதியிலேயே தொடர்ந்து சுற்றிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த யானையின் காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்து வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.